மண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0
511

(Jaffna Boat accident bodies Handover relatives)

யாழ்ப்பாணம் சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 06 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், உயிரிழந்த மாணவர்களின் உடற்கூறுகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நேற்றைய தினம் சென்றிருந்த 7 மாணவர்கள் சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்துக்கொண்டு, கடலுக்குள் சென்றிந்தனர்.

இந்த நிலையில், படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடற்படையினர், மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 6 மாணவர்களினதும் சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.

இவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று நண்பகல் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
உயிரிழந்த மாணவர்கள் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளார்கள் என்பது சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவர்களின் உடல்கூற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவர்கள் இறப்பதற்கு முன்னர் எதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அவர்கள் எதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 2 மாணவர்கள் சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்து கொண்டு கடலுக்குள் செல்ல முயன்றதாகவும் அதன் பின்னர் மற்றவர்கள் அதில் ஏறியதாகவும் சம்பவ இடத்தில் இருந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதன்பின்னர் கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் தண்ணீருக்குள் வீழ்ந்ததாகவும், அவர்களுக்கு நீச்சல் தெரியாது எனவும் ஏனைய மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related News :

பட்டம் விடும் பிரச்சினை : தந்தை, மகன் அன்னாசி வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்த கொடூரம் (இணைப்பு 02)

செப்டம்பர் முதலாம் திகதி முதல் நான்கு வகையான பொலித்தின் பொருள் உபயோகத்துக்கு தடை!

ஜனாதிபதியால் சைட்டம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!

இலங்கையின் கல்விமுறைமை மாணவர்களை சீர்குலைக்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

எனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தாலும் என்னை வீழ்த்த முடியாது: ராஜித்த சேனாரத்ன அதிரடி!

அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறிய கட்சிகளுடன் இணைந்தது ஐக்கிய தேசிய கட்சி போட்டியிட முடிவு!

என்னது அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் விஜயதாஸவா? பஷில் சொல்லும் கதை!

Our Other Websites :

Ulaganadappu.com

Tamilhealth.com

Sothidam.com

Sportstamil.com

Technotamil.com

Timesrilanka.com

Netrikkan.com

Tags; Jaffna Boat accident bodies Handover relatives

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here