கடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு!

0
366

(The rainfall received within the past 24 hours had exceeded 150mm)

கடந்த 24 மணி நேரத்திற்குள் மழைப்பொழிவு 150 மி.மீற்றர் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழைவீழ்ச்சி தொடர்ந்தால், எஹெலியகொட பிரதேச செயலக பிரிவு மற்றும் சுற்றுப்புற பிரதேசங்களில் உள்ள மக்களை மண்சரிவு அபாயத்தில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன் நிலச்சரிவுகள் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக வடக்கு மற்றும் தெற்கு கரதன, மேற்கு கலத்துவாவ, மகொட, தெய்யகள, வில்லேகொட, பொப்பட்ட, அத்கன்குல, மஹாஹரா, தலவிட்டிய, அரபொல கிராம சேவகர் பிரிவுகள், அயகம பிரதேச செயலக பிரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான நமுனுதென்ன, கங்கொடாக்கண்ட, சிங்களகொட, கலதுர, அவிச்சிகந்த, உதுகல, கொலம்பவ, உமன்கெதர மற்றும் கவரகிரிய ஆகியவை இனம்காணப்பட்டுள்ளது.

தெற்கு, மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100-150 மிமீ மழை வீழ்ச்சி ஏற்படலாம் எனவும், குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் குறித்த மழை வீழ்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்படுகின்றது.

நாட்டின் பல இடங்களில் கனத்த மழையுடன் பலத்த காற்று வீசுவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கடுமையான காற்று வீசும் ( 70-80 kmph) என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து காலி வரையிலான கடல் பகுதிகளிலும் மற்றும் பொத்துவில்லில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு வழியாக கடல் மட்டத்திலிருந்து தற்காலிக வலுவான காற்று வீசக்கூடும் என கூறப்படுகின்றது. மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையான காற்றின் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.

Related News : 

அரச உத்தியோகத்தர்களுக்கான பணி நேரத்தில் மாற்றம்!

கருணா மீதான விசாரணைகள் நிறைவடைவு : நிதி மோசடி விசாரணை பிரிவு!

பாராளுமன்றத்தில் 134 மில்லியன் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் மீண்டும் திருத்தங்களை கொண்டுவந்தால் தேர்தல் நடத்தப்படுவதில் மேலும் காலதாமதமாகும்: பிரதமர்

தமிழ் மக்களின் வாக்கினாலே நான் ஜனாதிபதியானேன் : மைத்திரிபால சிறிசேன!

நாட்டின் பல இடங்களில் தொடர் மழை : வெள்ள அபாயம்!

காட்டு யானைகளை வெளிநாட்டவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம்: கருணாரத்ன பரமவிதான தெரிவிப்பு!

நோயை பரப்பும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு

Our Other Websites :

Ulaganadappu.com

Tamilhealth.com

Sothidam.com

Sportstamil.com

Technotamil.com

Timesrilanka.com

Netrikkan.com

Tags : The rainfall received within the past 24 hours had exceeded 150mm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here