முதல்வரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்த பேரறிவாளனின் தாயார்

0
76
Perarivalan's mother

(Perarivalan’s mother)

பேரறிவாளன் தந்தையின் உடல்நிலை கருதி மேலும் ஒரு மாத காலம் அவருக்கான பரோலை நீட்டிக்க வேண்டும் என , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளார்

முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளனின் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

Perarivalan's mother

இந்தநிலையில், அவரது தந்தையின் உடல்நிலை கருதி, கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஒரு மாத பரோலில் தமிழக அரசு விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பேரறிவாளன் தந்தையின் உடல்நிலையை கருதி, மேலும் ஒரு மாத காலத்திற்கு, அவரது பரோலை நீட்டித்து உதவிடுமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here