கண் புரை சத்திரசிகிச்சைக்கு சென்றவர்கள் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதி

0
158
performed eye surgery

(performed eye surgery)

கண் சிகிச்சை வைத்தியசாலையொன்றில் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொண்ட 10 நோயாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களுக்கான கண் புரை சத்திர சிகிச்சையினை அசமந்தமான முறையில் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பகுதியைச் சேர்ந்த 10 நோயாளர்கள் கண் புரை சத்திரசிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மறுதினம் கண் பரிசோதனைக்காக வருமாறு வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் நிலைமை எவ்வாறு உள்ளதென தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுள்ளனர்.

சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு நேற்று (23) காய்ச்சலுடன் கண் திறக்கமுடியாமல் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கண் சிகிச்சை வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனாலும், கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களுக்கு ஏன் காய்ச்சலுடன் கண் திறக்க முடியாமல் ஏற்பட்டது என்பது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினருடனும், கண் சத்திரசிகிச்சை நிபுணரிகளிடமும் விளக்கம் கோரியுள்ளனர்.

சரியான பதில்கள் தமக்கு தரவில்லை என்றும், காய்ச்சல் மற்றும் கண் திறக்கமுடியாமைக்கான காரணத்தினை இதுவரை கண்டறியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒரு கண்ணில் கண் புரை சத்திரை சிகிச்சை மேற்கொள்வதற்கு 65 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால், சத்திரசிகிச்சையினை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(performed eye surgery)

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here