யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

0
390

(Jaffna university students protest)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றத்ஹ்திற்கு மாற்ற வேண்டும்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்தவிதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Top Stories :

Our Other websites :

Tags: Jaffna university students protest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here