புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையில் புதிய வானொலி..!

0
3183
capital FM sri lanka

capital FM sri lanka 
இலங்கையின் தனியார் வானொலி பட்டியலில் Capital FM என்ற புதிய வானொலியும் இணைந்துகொண்டுள்ளது. அண்மைக்காலமாக பரீட்சார்த்து ஒலிபரப்பை மேற்கொண்டிருந்த இந்த வானொலி டிசம்பர் முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஒலிபரப்பாகவுள்ளது.

உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், டிசம்பர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தென் இந்திய சினிமாகக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையில் எத்தனை ஊடகவகைகள் இயக்கம் பெற்றிருந்தாலும் பொதுமக்களிடையே அன்றாடப் பயன்பாட்டு ஊடகம் என்கின்ற பெருமையை பல்லாண்டு காலமாக வானொலியே தக்கவைத்துக்கொண்டிக்கிறது. இலங்கையின் தமிழ் வானொலிகள் உள்நாட்டு நேயர்களை மட்டுமல்லாது சர்வதேச நேயர்களையும், தம் ஆக்கத்திறன் வெளிப்பாட்டால் ஈர்த்து வைத்திருக்கின்றன. இவை புவியியல் எல்லைகளைக் கடந்து பல இலட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளைகொண்டுள்ளன.

இலங்கை தமிழ் வானொலித் துறையில் புதிய வானொலி அனுபவத்தை வழங்குவதற்குஇ புதிய சிந்தனை முழக்கத்தோடு ஒருங்கே இணைந்ததாய் “தனித்துவமானதும் புத்தாக்கமுமான தேசத்தின் குரலாய் புதிதாய் பிறக்கிறது Capital FM ”. நிகர்சொல்ல முடியாத புதுமையையும் இணைசொல்ல முடியாத புத்துணர்வையும் கொண்டு, வானலையில் தன் கன்னிக் குரலைப் பரப்பவிருக்கும் Capital FM இன் அனைத்து செயற்பாடுகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

கிருலப்பனை தேவிகா கார்டனில் இருந்து முழு இலங்கைக்கும் தனது ஒலிபரப்பை வழங்குவதற்காக 11 ஒலிபரப்பு நிலையங்கள் Capital FM இனால் அமைக்கப்பெற்று அதிநவீன தொழில்நுட்பங்களுடனான கருவிகள் பொருத்தப்பட்ட கலையகம் சிறப்பாய் நிறைவுபெற்றுள்ளது.

Liverpool Holdings நிறுவன குழுமத்தின் கீழ் வருகின்ற Trymas Media Network (Pvt) Ltd நிறுவனத்தின் நீண்டநாள் ஊடகக் கனவாக இருந்த Capital FM இத்தருணத்தில் நனவாய் மலர்கிறது. Capital FM வானொலியானது 2017.12.01 முதல் பெறுமதிமிக்க நேயர்களுக்கு விருந்தாக வானலையில் கலைபடைக்க ஆயத்தமாகிறது. இதன் மகத்தான ஆரம்ப நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாகவும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நம்நாட்டு கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஸ்நேகா, பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் வெங்கட்பிரபு, நடிகர்களான பிரேம்ஜி அமரன், வைபவ், நிதித் சத்யா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

Liverpool Holdings நிறுவன குழுமத்தின் உரிமையாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Capital FM ஆனது, இலங்கை ஊடகத்துறையில் 20 வருட அனுபவம் வாய்ந்த திரு.ஷியா உல் ஹசன் அவர்களின் தலைமையில் அனுபவமும் கலைத்திறமையும் வாய்ந்த அறிவிப்பாளர்களுடனும் வித்தியாசமான நிகழ்ச்சிகளுடனும் வானலையில் வலம்வர இருக்கிறது.

வித்தியாசமான சமூக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் வானலையில் வலம்வரவிருக்கும் Capital FM இன் இசைக் கட்டுப்பாட்டாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ஜபீர் அவர்களும் வானொலி அறிவிப்புத் துறையில் அனுவம் வாய்ந்த பிரபல அறிவிப்பாளர்கள் தர்ஷி, கிருபா, பிலிப் ரூபன், மிமிக்ரி பாலு, கே.சி.பி., பிரவீனா ரவீந்திரன், அப்சான், சஹானா, நிதா, ஹம்சி ஆகியோரோடு இன்னும் பல புதிய இளங்குரல்களும் அறிமுகமாகவுள்ளன. குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் சுவாரஸ்யமான கலைவடிவங்கள் ஊடாக அளிக்கவல்ல இந்த அணியினரின் உற்சாகம் Capital FM இற்கு தனிப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

குறுகிய காலத்தினுள் நேயர்களின் இதயத்துக்கு நெருங்கிய தோழனாய் மாறவிருக்கும் Capital FM ஆனது களிப்பூட்டும் ஒரு பொழுதுபோக்கு வானொலியாக மாத்திரமல்லாமல் சமூக பொறுப்புள்ள வானொலியாக சமூகத்தின் குறைநிறைகளை சீர்தூக்கி சமன்செய்யும் பணியையும் ஆற்றவுள்ளது.

Capital FM இல் உள்ளங்கவர் கலைநயம்மிக்க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் உண்மையானதும் பக்கச்சார்பற்ற வினைத்திறனும் தனித்துவமும் மிக்க செய்திகளை வழங்க செய்தித் துறையில் அனுபவம்மிக்க விமலநாதன் விமலாதித்தன், நிருஷா கனகசபை ஆகியோர் தயாராக உள்ளனர்.

எமது வானொலியின் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்கு Capital FM இன் விறுவிறுப்பும் உற்சாகமும் கொண்ட சந்தைப்படுத்தல் பிரிவும் திட்டமிடல் விரிவாக்கற் பிரிவும் சிறகுகளை விரித்து வெற்றியை நோக்கி ஒளிமிகுந்த பாதையில் தன் புத்தம்புதிய பயணத்தை ஆரம்பிக்கவிருக்கிறது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் முக்கிய அங்கமாக தலைசிறந்த ஒலிபரப்பாளர்களை கௌரவிப்பதில் Capital FM பெருமை கொள்கிறது. தமிழ் ஒலிபரப்புத் துறையில் அளவற்ற சாதனைகள் புரிந்து தன் கலைநயம்மிக்க காந்தக் குரலால் உலக நாடுகள் பலவற்றில் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவரும், இளம் அறிவிப்பாளர்கள் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவருமான பிரபல ஒலிபரப்பாளர் திரு.பி.எச்.அப்துல் ஹமீட் அவர்களும், சிங்கள ஒலிபரப்புத் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்தவரும் ஒலிபரப்புத் துறையை கிராமங்களுக்குக் காவிச் சென்றவருமான தலைசிறந்த சிங்கள ஒலிபரப்பாளருமாகிய திரு.சுனில் விஜேசிங்க அவர்களும், இலங்கையின் ஆங்கில ஒலிபரப்புத் துறையினை தன் சாதனைகளால் மிளிரச் செய்த ஒலிபரப்பாளரான திரு.அருண் டயஸ் பண்டாரநாயக்க அவர்களும் அதிமேதகு ஜனாதிபதியின் திருக்கரங்களால் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Top stories :

Our Other websites :

Tags: capital FM sri lanka , capital FM sri lanka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here