மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

0
239
International Disability Day Batticaloa

(International Disability Day Batticaloa)
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் வாழ்வகம் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வவுணதீவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஊனம் உடலில் இல்லை, மற்றவர்களின் மனதில் என்பதை உலகறிய எடுத்துக்கூறும் வண்ணமும் ஏணியை தாருங்கள் ஏற்றிவிட வேண்டாம் என்பதற்கமைய மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு அரசியல் வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விட்டிருந்தும் எவரும் கலந்துகொள்ளவில்லை என்றும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு விசேட தேவையுடையோர் மற்றும் சமூக அமைப்புக்கள் பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Top Stories

Our Other websites :

Tags; International Disability Day Batticaloa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here