மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்!

0
170
Husband killed wife

(Husband killed wife by attacking her with sharp weapon)

வெல்லவாய – தெலுள்ள பகுதியில் நேற்று இரவு பெண் ஒருவர் அவரது கணவனால் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்னின் முதலவாது கணவன் 15 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், 5 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Top Stories :

Our Other websites :

Tags: Husband killed wife by attacking her with sharp weapon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here