கிளிநொச்சியில் கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

0
166
Illegally abducted tree logs seized

(Illegally abducted tree logs seized)

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பெறுமதியான பால மரக்குற்றிகளுடன் சென்ற இரண்டு வாகனங்களை கிளிநொச்சி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (25) அம்பாள்குளம் பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபரின் விசேட மது ஒழிப்பு பிரிவினரால் பால மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

12 பெறுமதியான பால மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உதவி காவல்துறை பரிசோதகர் பிரதீபன் மற்றும் காவல்துறை அதிகாரிகளான திசாநாயக்க, அதிகாரி, கணேஸ்குமார், ரஞ்சீப்ராஜ், அலகேசன் ஆகியோரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Top Stories :

Our Other websites :

Tags: Illegally abducted tree logs seized

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here