காதலியின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை முகநூலில் பதிவேற்றியவர் கைது!

0
352
Man arrested upload Ex naked photos

(Man arrested upload Ex naked photos)

யுவதி ஒரு­வரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

27 வய­து­டைய அங்­கு­ணு­கொ­ல­ப­லஸ்ஸ பிர­தே­சத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்­பாந்­தோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய யுவதி ஒரு­வ­ரினால் சிறுவர் மற்றும்­ பெண்கள் பணியகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமை­யவே குறித்த இளைஞர் நேற்று தங்காலை பிர­தேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியக விசேட விசாரணை பிரிவினரால் கைது­ செய்யப்­பட்டார்.

கைது ­செய்­யப்­பட்ட குறித்த சந்­தே­க­நபர் நேற்று மாலை தங்­காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தங்காலை நீதிவான் நீதி­மன்ற நீதிபதி பெப்ரவரி 2 ஆம் திகதி வரையில் குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பாதிக்­கப்­பட்ட யுவ­தியின் குறித்த முறைப்­பாட்டில் தனது அனுமதியில்லாமல் தனது புகைப்படங்கள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை காதலன் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Top Stories :

Our Other websites : 

Tags:  Man arrested upload Ex naked photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here