பிரான்ஸில் இலங்கை தமிழர் வெட்டிக் கொலை: கொலையாளி தற்கொலை!

0
371
Srilankan tamil murderd France, murderer commits suicide

(Srilankan tamil murderd France, murderer commits suicide)

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாரிஸ் உணவகமொன்றில் கடமையாற்றி வந்த இளைஞர் அந்த உணவகத்தின் நிலக்கீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடலின் பல பாகங்களிலும் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் 25 வயது மதிக்கத்தக்கவரென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிபுரியும் அவரது 34 வயதுடைய நண்பரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொலை மற்றும் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் வெளிவராத நிலையில், பாரிஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Top Stories :

Our Other websites : 

Tags: Srilankan tamil murderd France, murderer commits suicide

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here