மடக்கி பிடிக்கபட்ட திருடன்; ஹட்டன் குடாஒயாவில் சம்பவம்

0
364
Thief arrested

(Thief arrested kudaoya Hatton)
ஹட்டன் குடாஒயா விநாயகர் புறம் பகுதியிலுள்ள இந்துமத ஆலய குருக்களின் வீட்டிற்குள் நேற்றிரவு உட்புகுந்த திருடனை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குருக்கள் வீட்டில் கூரை பகுதியைக் கழற்றி கொண்டு திருடன் உட்புகுந்த வேளை, சிறிய குழந்தையின் அலரல் சத்தத்தைக் கேட்ட வீட்டாரும், அயலவர்களும் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து, மரம் ஒன்றில் கயிற்றினால் கட்டிவைத்துள்ளனர்.

இதனையடுத்து, ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யபட்ட சந்தேக நபரை இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Top Stories :

Our Other websites : 

Tags; Thief arrested kudaoya Hatton

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here