வடக்கு கிழக்கில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்

0
169
Local council election commencement starts North East

(Local council election commencement starts North East)
உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து இந்த வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 901 பெண் பிரதிநிதிகள் உட்பட 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 3 இலட்சத்து 89 ஆயிரத்து 582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 457 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக மாவட்டத்திற்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்து வருகை தந்துள்ள 4437 உத்தியோகத்தர்கள் இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களில் 124 வட்டாரங்கள் கொத்தணி அடிப்படையிலும் 20 வாக்கு நிலையங்களிலும் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான எம். உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்துக்கான தற்காலிக தேர்தல் மத்திய நிலையமாக செயற்படுகின்ற யாழ். மத்திய கல்லூரியில் இருந்து அறிக்கையிடும் உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் அவற்றை பொறுப்பெடுத்து தமக்குரிய வாகனங்களில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி செல்வதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை காலை அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்களிப்பு 07 மணியளவில் ஆரம்பாமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Top Stories :

Our Other websites : 

Tags; Local council election commencement starts North East

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here