கல்முனையில் இனந்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு

0
176
Motorcycle fire unidentified persons Kalmunai

(Motorcycle fire unidentified persons Kalmunai)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை அக்பர் கிராமத்தில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.கே. சுல்பிகார் அலி என்பவரது மோட்டார் சைக்கிள் அவரது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த நிலையிலேயே எரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Top Stories :

Our Other websites : 

Tags; Motorcycle fire unidentified persons Kalmunai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here