264 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இளைஞன் கைது

0
137
young man arrested 264kg waste tea powder

(young man arrested 264kg waste tea powder)
வெலிமடை புகுல்பொல பகுதியில் சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலைத்தூளுடன் இன்று அதிகாலை 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இல்லாமல் பதுளை வெலிமடை பிரதான வீதியில் அட்டம்பிட்டிய பகுதியில் இருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சந்தேக நபர் வெலிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை வெலிமடை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Top Stories :

Our Other websites : 

Tags; young man arrested 264kg waste tea powder

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here