காத்தான்குடியில் குண்டுத் தாக்குதல்

0
158
Bomb attack Kattankudi

(Bomb attack Kattankudi)
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இன்று அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி, கடற்கரை வீதியிலுள்ள அலுவலகம் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேரம் குறித்து வெடிக்கும் (ரைம் பொம்) குண்டு மூலமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார், விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவினர் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குண்டு வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவுற்ற நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Today Related News

Our Other websites :

Tags; Bomb attack Kattankudi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here