தேர்தல் மோசடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்

0
175
Arrested immediately Candidate fraud election

(Arrested immediately Candidate fraud election)

உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் மோசடியில் ஈடுபட்டு மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்தவரை கைதுசெய்ய வேண்டும் என கோரி கொத்மலை கெட்டபுலா மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொத்மலை பிரதேச சபைக்கு கெட்டபுலா பகுதியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ஒருவர் போட்டியிட்டார்.

இவ்வாறு இருக்கையில், தேர்தல் நடைபெற இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தீடிரென தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர் என தெரிவிக்கப்படும் ஒருவர் தான் இந்த தேர்தலில் கெட்டபுலா வட்டாரத்திற்கு யானை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறியுள்ளார்.

எனவே, தனக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்தோட்டத்தின் வாக்காளர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், இவரை உடனடியாக கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கெட்டபுலா மேற்பிரிவு தோட்ட ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றதுடன், சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்த தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர் என கூறுபவரை தேர்தல் சட்ட விதிகளின்படி கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் மீதான முறைபாட்டை நுவரெலியா தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயத்தின் தெரிவித்தாட்சி அதிகாரிக்கு முறையிட்டுள்ளதுடன், தேர்தல் முறைபாட்டு பகுதிக்கும் தெரிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் முறையான நடவடிக்கை இதுவரை தொடரவில்லை என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறு தேர்தல் மோசடியில் ஈடுப்பட்டவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்படியும் இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

Related Stories  

Our Other websites :

Tags; Arrested immediately Candidate fraud election

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here