தீயில் கருகி இளம் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்

0
155
Fire accident women dead incident Batticaloa

(Fire accident women dead incident Batticaloa)
மட்டக்களப்பு கரடியனாறு கோப்பாவெளி 78 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 30 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை இராஜினி என்பவரே நேற்றிரவு தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டில் மதிய வேளை உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். மாலை நேரம் ஆகியும் வீட்டில் எந்தவித நடமாட்டங்களும் இல்லாததால் அயலிலுள்ளவர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர்.

இதன்போது குறித்த பெண் தீயில் கருகிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதால் வலிப்பு நோயைக் காரணம் காட்டி கணவன் பிரிந்து சென்று விட்டதாகவும் பெற்றோரின் ஆதரவில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் இரு பிள்ளைகளும் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories  

Our Other websites :

Tags; Fire accident women dead incident Batticaloa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here