தலங்கமவில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி

0
168
Husband Injured Thalangama Shooting Dies

(Husband Injured Thalangama Shooting Dies)

தலங்கம விமலதிஸ்ஸ மாவத்தையில் இன்றைய தினம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடொன்றிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்தனர்.

இவர்கள் இருவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி கணவன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இருவர் குறித்த வீட்டிற்குள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories  

Our Other websites :

Tags; Husband Injured Thalangama Shooting Dies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here