சிவனொளிபாத மலையில் கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 27 பேர் கைது

0
202
Sivanolipatha malai 27 people arrested

(Sivanolipatha malai 27 people arrested with cannabis heroin drugs)
சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடம் இருந்த கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் ‘கோரா’ என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களில் இருந்து சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக சென்றவர்களிடம் இருந்தே கஞ்சா பக்கட்களும், ஹெரோயின் பக்கட்களும் கைப்பற்றப்பட்டன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்றிரவு வாகனங்களை தீடிரென ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போது 8 மில்லிகிராம் ஹெரோயினும் 59750 மில்லிகிராம் கஞ்சா பக்கட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த 27 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

Related Stories  

Our Other websites :

Tags; Sivanolipatha malai 27 people arrested with cannabis heroin drugs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here