எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மறுசீரமைப்பு

0
246
Restructuring cabinet next Wednesday

(Restructuring cabinet next Wednesday)
எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையை தீர்த்ததன் பின்னர் ஒரு புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் மேலும் தொடர்ந்தால் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாத்திரமே மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கம் அல்லாத போது அமைச்சரவையில் அமைச்சுக்கள் 30 க்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவை அல்லாத அமைச்சுக்கள் 45 ஆக நியமிக்கப்படும் என்றும் நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories  

Our Other websites :

Tags; Restructuring cabinet next Wednesday

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here