77 வயது பாட்டி துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் விளக்கமறியலில்

0
193
Suspect remanded 77 year old grandmother abused

(Suspect remanded 77 year old grandmother abused)
வீட்டில் தனிமையில் இருந்த 77 வயது பாட்டியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், பிங்கிரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவரின் மனைவி தற்போதைய நிலையில் வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்வத்த, கஜுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த வயோதிபப் பெண்ணின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கடைக்கு அனுப்பி சந்தேக நபர் இந்த குற்றச்செயலை புரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய குறித்த சந்தேக நபர் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணின் உறவு முறை பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories  

Our Other websites :

Tags; Suspect remanded 77 year old grandmother abused

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here