ரணிலை பாதுகாக்கும் மைத்திரி; மஹிந்த குற்றச்சாட்டு

0
129
Will not support UNP Prime Minister

(Will not support UNP Prime Minister)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்காமல் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான சட்டபூர்வ தன்மை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியமை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, எதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர வேண்டும், நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதை அவர் மறந்து விடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை தொடர்ந்து பாதுகாக்கிறாரா என்று ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நிச்சயமாக – வேறு யார் அவரை பாதுகாப்பது? என்றும் மஹிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

நாங்கள் கூறினோம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக நியமித்தால், அவர்களுக்குப் பின்னால் இருப்போம் என்று. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவரை ஆதரிக்க மாட்டோம் என்றும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தான், தற்போதைய பிரதமர் பதவியில் இருக்கிறார் என்றும் மஹிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு தகுதியான எதிர்கட்சி பதவி வழங்கப்படும் என நம்புகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories  

Our Other websites :

Tags; Will not support UNP Prime Minister

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here