கம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது

0
156
Man killed Gampaha Two arrested

(Man killed Gampaha Two arrested)
கம்பஹா – கெஹல்பத்தர பிரதேசத்தில் துப்பாக்கியினால் சுட்டு ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேலியகொட மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, களனி திப்பிட்டிகொட பிரதேசத்தில் வைத்து குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories  

Our Other websites :

Tags; Man killed Gampaha Two arrested

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here