பிரதான கட்சிகளின் அரசியல் விளையாட்டே நாட்டின் குழப்பத்திற்கு காரணம்

0
133
Political confusion reason Main parties political game

(Political confusion reason Main parties political game)
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்குக் காரணம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அல்ல எனவும் பிரதான கட்சிகளின் தலைவர்களின் அரசியல் விளையாட்டே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் பிரசாரத்தின் போது புகழ்பெற்ற தங்களை விமர்சனம் செய்துகொண்டுள்ளதாகவும் இந்த அதிகாரப் போராட்டத்தினால் முழுநாடும் அரசின்மைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தலைவர்களும் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது தலைமைத்துவத்தை கைப்பற்ற முயற்சி செய்தார்களே தவிர, 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு கைகோர்த்தவர்கள் மீண்டும் இணையமாட்டார்கள் என்றும் 2015 ஆம் ஆண்டு மக்களின் ஆணையாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதன் மூலமாக நாட்டின் ஸ்திரத்தன்மை நிலை நாட்ட முடியாது எனக் குறிப்பிட்ட அவர்,

2015 ஆம் ஆண்டு உறுதியளித்த மக்களின் ஆணையை நிறைவேற்றுவதன் மூலமாகவே நாட்டின் ஸ்திரத்தன்மைய அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மக்களின் கட்டளையை நிறைவேற்றும் வரை மக்கள் விடுதலை முன்னணி மக்களுடன் போராடும் என்றும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

Related Stories  

Our Other websites :

Tags; Political confusion reason Main parties political game

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here