மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் ; மாரவிலவில் சம்பவம்

0
181
Husband knife attack

(Husband knife attack Kills Wife)
மாரவில பகுதியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கணவர் தப்பிச் சென்றுள்ளார்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மஞ்சுளா பிரியதர்ஷனி என்ற பெண்ணே நேற்றிரவு கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்றிரவு சந்தேக நபரான கணவர் வீட்டிற்கு சென்ற போது மனைவி தனது நண்பர் ஒருவருடன் வீட்டில் இருந்ததால் கோபமுற்று, அவர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாக்குதல் நடத்தியவரின் மனைவி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் தேடப்படும் சந்தேகநபர் சில வருடங்களுக்கு முன்னர் மாரவில கடற்பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து 60 வயதுடைய ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories  

Our Other websites :

Tags; Husband knife attack Kills Wife

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here