எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

0
206
Complaints Police MK.Shivajilingam

(Complaints Police MK.Shivajilingam)
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாம் முன் நேற்றைய தினம் இடம்பெற்ற நில மீட்பு போராட்டம் தொடர்பிலேயே நில அளவை திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் நில அளவை திணைக்களத்தின் வாகனத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கோட்டபாய கடற்படை முகாமுக்காக காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நில அளவீட்டு பணிகள் நேற்றைய தினம் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில், இதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி கோட்டபாய முகாமுக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Stories 

Our Other websites :

Tags; Complaints Police MK.Shivajilingam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here