இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி தொடர்பான நூல் வெளியீடு

0
187
Army controlled land Book Release

(Army controlled land Book Release)
வன்னி பிரதேசத்தில் அரச படைகளினால் பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பான நூல் வெளியீடு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கதின் ஆய்வு அறிக்கையை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் 11 மணியாவில் முல்லைத்தீவு நகர மண்டபத்தில் இந்தப் புத்தக வெளியீடு இடம்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் இலங்கை தொடர்பான அமர்வை மையப்படுத்தி மக்களின் தற்போதைய உண்மை நிலையை வெளிப்படுத்தும் முகமாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த புத்தக வெளியீட்டுக்கு இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினை தொடர்பாக முகம் கொடுக்கின்ற பல நூற்றுகணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் சுவிஸ் நாட்டின் அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் வூவி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹர்மன் குமார, வடக்கு கிழக்கு இணைப்பாளர் அ. ஜேசுதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories 

Tags; Army controlled land Book Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here