செல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!!

0
201
Selvapuram people Protest Mullaitivu district secretariat

(Selvapuram people Protest Mullaitivu district secretariat)
செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரை விடுவிக்கக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக செல்வபுரம் மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தடுத்து அரச அதிகாரிகளோடு முரண்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மீது, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுவிக்க கோரி செல்வபுரம் மக்கள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags; Selvapuram people Protest Mullaitivu district secretariat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here