அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்ய நடவடிக்கை

0
217
Admiral wasantha karannagoda Action arrest

(Admiral wasantha karannagoda Action arrest)
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அல்மிரல் கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தக் கடத்தல்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அட்மிரல் வசந்த கரன்னகொட தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் ஆம் திகதி தமக்கு அறியத் தர வேண்டும் என்று கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Other News

Our Other websites :

Tags; Admiral wasantha karannagoda Action arrest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here