கருத்தடை மாத்திரையா கலவரத்துக்கு காரணம்? : உண்மையை ஒத்துக்கொண்ட கடை உரிமையாளர் (வீடியோ ஆதாரம்)

0
453

(Ampara Muslim attack Contraception Birth control table mixxing)

Update 04

கருத்தடை மாத்திரையை கலந்தமையே அம்பாறையில் நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்துக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்ததாக கடை உரிமையாளர் ஒத்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுறுத்தலுக்கு பயந்தே தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்தேன் என்று ஒத்துக்கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் பாரதூரமான விடயம் என்பதால் இவ்விடயத்தை இலகுவாக ஒத்துக்கொள்வதற்கான சாத்தியங்களும் இல்லை என்பது இங்கு சுட்டிகாட்டத்தக்கது.

Update 03
வன்முறையை ஆரம்பித்த குற்றச்சாட்டில் இரு சிங்களவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update 02

பஸ்களில் வந்து வன்முறை, முஸ்லிம்கள் மீது பெரும் அராஜகம், குர்ஆனுக்கும் தீ வைப்பு (படங்கள்)

update 01

அம்பாறை நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர், உணவக உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் உணவகத்துக்கும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேவேளை அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீவைத்துவிட்டு, பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதில் பள்ளிவாசலின் மதில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலிலிருந்த மக்கள் விரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகவும் பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Ampara Muslim attack Contraception Birth control table mixxing)

Other News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here