வட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை

0
267
vadduvakal Protest

(vadduvakal Protest Issue)
முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டபாய கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் செய்தவர்கள் பலரை சட்டத்திற்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்யவந்த அதிகாரிகளை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் போராட்டம் மேற்கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, மக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றத்திற்கு விசாரணைகாக அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி முற் பிணை விண்ணப்பத்தை கோரியுள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 06 திகதி இந்த வழக்கை விசாரிப்பதற்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பகுதியில் ஆர்பாட்டத்தை முன்னெடுத்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தல், அரச ஊழியர் வேலைக்கு இடையூறு, பொதுமக்களின் பாவனைக்கான வீதியை இடையூறு, கடமையில் இருந்த அரச ஊழியர் மீதான அச்சுறுத்தல், வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியமை, அரச வாகனத்தை அடித்து சேதப்படுத்தியமை, சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை போன்ற குற்றங்களின் கீழ்,

வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், மற்றும் சி. லோகேஸ்வரன், இளஞ்செழியன், சண்முகலிங்கம் பேன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Other News

Our Other websites :

Tags; vadduvakal Protest Issue

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here