வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்

0
315
Shocking Vattapalai Kannai Amman Temple Mullaitivu

(Shocking Vattapalai Kannai Amman Temple Mullaitivu)
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீப ஆராதனையின் போது, அம்மனின் திருவுருவம் தென்பட்டதாக பக்தர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக நேற்றைய தினம் ஆலயத்தில் கிரியைகள் இடம்பெற்று இன்றைய தினம் முதல் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றுவரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது, தீபத்தில் திருவுருமாகத் தோன்றிய அம்மன், பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின் போது அம்மனின் அற்புதக் காட்சிகள் தென்படுவதாகவும் பூசகர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் பக்த அடியார்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.

More Tamil News Today

Tamil News Group websites :

Tags; Shocking Vattapalai Kannai Amman Temple Mullaitivu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here