பிள்ளைகளின் கண்முன்னே தாயை எரித்துகொன்ற கணவன் : விசுவமடுவில் கொடூரம்

0
519
husband sets wife fire visuvamadu

(husband sets wife fire visuvamadu)
மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை பிள்ளைகளின் கண்னே முன்னே கணவன் எரித்து கொலை செய்த சம்பவம் விசுவமடு பகுதியில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு, விசுவமடு தொட்டியடியைச் சேர்த 41 வயதுடைய சிவகுமார் சிவமலர் என்ற பெண்ணே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

உயிரிழந்த பெண்ணுக்கு 20,16 மற்றும் இரண்டரை வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

குறித்த பெண் தையல் தொழில் செய்து வருதோடு கணவன் கமத் தொழில் செய்து வருகின்றார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று கணவன் மது அருந்திவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது ஆடை தைத்துக்கொண்டிருந்த மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு பயந்து மனைவி வீட்டின் பின்புறமாக சென்று ஒழிந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் மண்ணெண்ணையை எடுத்து தான் தீக்குளிக்க போவதாக கத்தியுள்ளார்.

உடனே மனைவி வெளியில் வந்து கணவனை காப்பாற்றியுள்ளார்.

சிரிது நேரத்தில் கணவன் நித்திரைக்கு சென்றுள்ளார். திடீரென இரவு 9 மணியளவில் நித்திரையில் இருந்து எழும்பிய கணவன், மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை நேரில் பார்த்த பிள்ளைகள், அம்மாவுக்கு தீ வைக்க வேண்டாம் என கதறி அழுத போதும் போதையில் இருந்த தந்தை மனைவிக்கு தீ வைத்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த அயலவர்கள் உடனடியாக குறித்த பெண்ணை தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:husband sets wife fire visuvamadu, husband sets wife fire visuvamadu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here