ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்

0
1179
Joseph Michael resigns UNP working committee

(Joseph Michael resigns UNP working committee)
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் பெரேரா கட்சியின் செயற்குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களுக்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், ரவி கருணாநாயக்க உப தலைவராகவும் பொருளாளராக ஹர்ச டி சில்வாவும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

கட்சியின் அடுத்த பதவிகள் தொடர்பில் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:Joseph Michael resigns UNP working committee,Joseph Michael resigns UNP working committee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here