மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்

0
964
may 1 or 7 leave

(may 1 or 7 leave)
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் இம்முறை இலங்கையில் 7ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இதனை யாரும் பெரிதாக கணக்கெடுக்கவில்லை.

பெரும்பாலானோருக்கு மே முதலாம் திகதியா அல்லது மே 7 ஆம் திகதியா விடுமுறை என்ற குழப்பம் மாத்திரமே இருந்து வந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர,

வெசாக் தினத்தை முன்னிட்டு மேதினம் மே 7 ஆம் திகதிக் மாற்றப்பட்டுள்ளது.

மே மாதம் 7 ஆம் திகதியில் தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதால் அன்றைய தினமே விடுமுறையாகும்.

அந்தவகையில் தனியார்துறை மற்றும் அரச ஊழியர்களுகுக்கு மே 7ஆம் திகதியே விடுமுறை வழங்குவதோடு முதலாம் திகதி வழமை போன்று அலுவலகங்கள் இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:may 1 or 7 leave, may 1 or 7 leave

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here