முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு

0
2989
Muslim teachers controversy

(Muslim teachers controversy)
சுமூகமான தீர்வு மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வரை திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் விஷேட கலந்துரையாடலொன்று திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ச, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் திருகோணமலை நகரக் கிளைத் தலைவர் ஏ.ஆர்.பரீட் மௌலவி,

திருகோணமலை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ். வலீத் ஹாஜியார், என்.சீ. ரோட் பள்ளி தலைவர் எம்.வை. இல்யாஸ், நகர சபை உறுப்பினரான மௌசூன் மாஸ்டர், பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன், திடீர் மரண விசாரணை அதிகாரி ரூமி மற்றும் சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பாக நாம் கரிசனையுடன் வாழ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என வெளிக்காட்டியதுடன் பாடசாலையின் சமய கலாசாரம் பேணப்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை சார்பாக கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஆசிரியர்கள் பாடசாலைக்கு பொருத்தமான பாடசாலையினால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags; Muslim teachers controversy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here