மக்களே அவதானமாக இருங்கள்….!

0
1577
Sri Lanka weather forecast today news

Sri Lanka weather forecast today news

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்பிரகாரம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சுமர் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென்கிழக்கு மாகாணங்களின் கடற்கரையோரப்பகுதிகளில் காலை வேளைகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக அப் பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்கள் ஏற்பட கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here