மலையக புகையிரத சேவை பாதிப்பு

0
210
Upcountry train service

A train derailed at Pallewela- Railway Control Room

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் தடம் புரண்டமையினால் மலையக புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தபால் சேவை புகையிரதம் நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம என்ற பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தினால் புகையிரதத்தின் மூன்று பெட்டிகளே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி புகையிரத அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குறித்த புகையிரதத்தில் பயணித்த பயணிகளையும், தபால் கடிதங்களையும் வேறொரு புகையிரதத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் சில மணி நேரம் பயணிகள் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின்னர் மலையக புகையிரத சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

update – 02

பல்லேவெல பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிக்கு செல்லும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் என புகையிரத கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here