காதல் ஜோடியை துரத்திச் சென்ற உறவினர்கள்!! மின்கம்பத்தில் மோதி கோர விபத்து! காதலி மரணம்!!காதலன் படுகாயம்!!

0
165
Relatives chased love couple Crash motorcycle accident Lover death

Relatives chased love couple Crash motorcycle accident Lover death

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன், காதலனை திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார்  உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் முல்லைத்தீவு அளம்பில் கெனேடியன் வீதியைச்சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) ஆவார்.இந்த வாலிபர்- வவுனியா கிடாச்சூரி பகுதியைச்சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா என்ற (17 வயது) என்ற யுவதியை காதலித்து வந்துள்ளார்.

இந்த யுவதி, தனது வீட்டை விட்டு வெளியேறி முல்லைத்தீவில் காதலனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனையடுத்து இருவீட்டாருக்கும் முறுகல் ஏற்பட்ட, யுவதியை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர், காதலனின் பெற்றோர். வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் காதலனை மறக்கும்படி யுவதிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், திருகோணமலை சம்பூரிலுள்ள உறவினர் வீட்டில் யுவதியை தங்க வைத்துள்ளனர். இந்தநிலையில், காதலனை இரகசியமாக தொடர்புகொண்ட யுவதி, தான் சம்பூரில் இருக்கும் விடயத்தை கூறியிருக்கிறார். தன்னை அழைத்து செல்லும்படியும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று (11) காதலனான பிரபாகரன், மோட்டார்சைக்கிளில் சம்பூருக்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டைவிட்டு சமயோசிதமாக வெளியேறிய யுவதியை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவுக்கு திரும்பியுள்ளார். எனினும், இதனை அவதானித்த யுவதியின் உறவினர்கள், மோட்டார்சைக்கிளில் விரட்டியுள்ளனர்.

மோட்டார்சைக்கிளின் பின்னாலிருந்த யுவதி, “வேகமாக போங்கள்… பின்னால் துரத்துகிறார்கள்“ என கூறியிருக்கிறார். இதையடுத்து, மோட்டார்சைக்கிள் வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையிலேயே காதலன் பின்னால் திரும்பி பார்த்துள்ளார். அந்த சமயத்தில் மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியானார். காதலன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனையின் பின் னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளான 23 வயதுடைய காதலன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Relatives chased love couple Crash motorcycle accident Lover death

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here