குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் மின்சாரம் தாக்கிப் பலி!! வவுனியாவில் சோகம்!!

0
72
Father andSon areRescued atVavuniya Suduvanthapulava tank

Father andSon areRescued atVavuniya Suduvanthapulava tank

வவுனியா – சூடுவெந்தபுலவு குளத்திற்கு அருகே தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த சடலங்களை நேற்று இரவு 10.00 மணியளவில் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றைய தினம் மீன் பிடிக்க சென்ற போது, அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் அதே பகுதியினை சேர்ந்த சாகில் முகமட் முஸ்தப்பா (வயது-48) , அவரது மகனான முஸ்தப்பா முகமட் ரயாஸ் (வயது-15) என அவது உறவினர்கள் சடலத்தினை அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத் தடவியல் பொலிஸாருடன் இணைந்து, உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :second day Mullivaikkal War Rememberance Protest Lightening

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here