மனநிறைவு மகிழ்சி மூலம் தொற்றா நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் – கிழக்கு சுகாதாரப்பணிப்பாளர்

0
57
satisfaction happiness can Prevented byill health Eastern Health Secretary

satisfaction happiness can Prevented byill health Eastern Health Secretary

மட்டக்களப்பு, கல்முனை ஆதாரவைத்தியசாலையின் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

வைத்தியசாலை வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் கே.முருகானந்தன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரையாற்றுகையில்,

‘மனநிறைவு மற்றும் மகிழ்சி மூலம் தொற்றா நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்’ அந்தவகையில் இந்நிகழ்வு நிச்சயம் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

அன்று 3டாக்டர்களுடன் தொலைபேசி வசதிகளின்றி பல்வேறுபட்ட வசதியின்மைக்கு மத்தியில் இங்கு கடமையாற்றியதனை நான் இன்று நினைத்துப்பார்க்கின்றேன். இன்று டாக்டர் முரளீஸ்வரன் தலைமையில் 80 டாக்டர்களுடனும் பல நிபுணர்களுடனும் பல பிரிவுகளுடனும் சிறப்பான சுகாதார சேவை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மக்கள் மனங்களில் நிறைந்த ஒரு வைத்தியசாலையாக கல்முனை ஆதாரவைத்தியசாலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்களின் மன அழுத்தங்களை கருத்திற் கொண்டு நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ரி.சர்வானந்தன் (பொறியிலாளர்,மாநகர சபை கல்முனை) எம்.கே. பேரின்பராஜா (முதுநிலை சட்டத்தரணி) , அதிதிகளாக ஆர் தர்மசேன (கட்டளை அதிகாரி இராணுவ முகாம் கல்முனை) கே.எஸ். ஜெயநித்தி (தலைமை போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி கல்முனை) வி.திருஞானசம்பந்தர் (மின் அத்தியட்சகர் இலங்கை மின்சார சபை கல்முனை)ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: satisfaction happiness can Prevented byill health Eastern Health Secretary

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here