மின்சார தடை காரணமாக நீர் விநியோகம் துண்டிப்பு

0
63
Discontinue water supply due toelectric restraint inKalutura

Discontinue water supply due toelectric restraint inKalutura

இலங்கை மின்சார சபையின் திருத்த வேலை காரணமாக கேன்கஹஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் இன்று (17) பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் மாலை 7 மணி வரையான 11 மணிநேர காலப்பகுதியில் இந்த நீர் விநியோகம் துண்டிக்கடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வாத்துவை, வஸ்கடுவை, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட, பயாகல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிலிமினவன்ன, பெம்புவல, பேருவளை, களுவமோதர, மொரகல்ல, அழுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தொட ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

Tags : Discontinue water supply due toelectric restraint inKalutura

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here