ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

0
41
Srilanka Freedom Party central executive meeting today

Srilanka Freedom Party central executive meeting today

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (17) இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில ​யோசனைகளை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று இதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனை சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

Tags : Srilanka Freedom Party central executive meeting today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here